2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸுடன் சுயேட்சைக் குழு இணைவு

Kogilavani   / 2011 மார்ச் 13 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

உள்ளூராட்சி சபை தேர்தலில் அக்கரைப்பற்று மாநகரசபையில் போட்டியிட்ட 5ஆம் இலக்க சுயேட்சைக் குழு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைவு.

பி.அமீன் தலைமையில் "உணவுத் தட்டு" சின்னத்தில் போட்டியிட்ட 5ஆம் இலக்க சுயட்சைக் குழு  நேற்றிரவு அக்கரைப்பற்று யூனியன் வீதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்தே இணைந்து கொண்டது.

இந்த சுயேட்சை குழு அக்கரைப்பற்று மாநகரசபைக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அந்த கட்சியின் முதலாம் இலக்க வேட்பாளர் ஏ.எல்.மர்ஜுன் என்பவரையும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .