Menaka Mookandi / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இன்று காலை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில், கேள்விச் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், அலுவலகத்தை வேறு இடத்துக்குக் கொண்டு செல்தல், புதிதாக வீதித் தொழிலாளர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.
மு.காங்கிரசினூடாகத் தெரிவு செய்யப்பட்ட 7 பேரும், ஐ.ம.சு.முன்னணியிலின் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட இருவமாக சபையின் ஒன்பது பிரதிநிதிகளும் மேற்படி அமர்வில் கலந்து கொண்டனர்.
வீதி விளக்குகளை காலதாமதமின்றி தேவையான இடங்களுக்கு பொருத்தும் நடவடிக்கைகளை முதலில் ஆரம்பிக்க வேண்டுமென உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த அமர்வின் போது தவிசாளர் நசீர் உரையாற்றுகையில்ளூ எதிர்க்கட்சி என்கின்ற பாகுபாடுகள் எவையும் இங்கு பேசப்படக் கூடாது. நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். மக்கள் நலனுக்காக உழைப்பதுதான் நமது கடமை. எனவே, நாம் அனைவரும் இந்த சபையினூடாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
ஏதிரணி உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த பிரதேச சபை ஆட்சிக் காலத்தில் முதலாவது சபை அமர்வே பெரும் அமளிதுமளியுடனும், முரண்பாடுகளுடனுமே ஆரம்பித்தது.
ஆனால், இன்றைய அமர்வு சந்தோசமான முறையில் இடம்பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். நமது தவிசாளரின் நல்ல திட்டங்கள் அனைத்துக்கும் எமது ஆதரவினை வழங்குவோம் என்றனர்.
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago