Super User / 2011 ஜூன் 01 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியிலுள்ள மையவாடிக்கான சுற்றுமதிலை நிர்மாணிப்பதற்குரிய ஆரம்ப கட்ட நிதியினை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வழங்குவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று அப்பிரதேச மக்களிடம் உறுதியளித்தார்.
ஆலங்குளம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்ததோடு, மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
இதேவேளை, ஆலங்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமையை நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டிய அப்பகுதி மக்கள் - தமது வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்துத் தருவதற்கு உதவுமாறும் கோரினர்.

3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago