2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Super User   / 2011 ஜூன் 26 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம்.எம்.றம்ஸான்)
 
உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி மஹ்ருப் இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம்இ சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் குழுஇ கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு இணைப்பாளர் காரியாலயம் என்பன கூட்டாக இப்பாராட்டு விழா நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் மனித உரிமை ஆணைக்குழவின் உறுப்பினருமாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X