Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 29 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
நெல் வயல்களில் மஞ்சள் கோரை எனும் புற்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் விவசாய நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி இன புற்களை களை நாசினிகள் மூலம் அழிக்க முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் எம்.சி.பி.ஏ. எனும் களை நாசினியை இம்முறை விவசாயிகள் பயன்படுத்திய போதும் பலன் கிட்டவில்லை என விவசாயிகள் சுட்டிக் காட்டுக்கின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் களை நாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்து மஞ்சள் கோரையின் அதீத வளர்ச்சி மற்றும் களை நாசினிகளால் இக் களைகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை போன்றவை குறித்து நேரடியாகக் கண்டறிந்து தரவுகளைப் பெற்றுச் சென்றுள்ளதாக விவசாய ரசாயனப் பொருள்களின் விற்பனையாளரொருவர் தெரிவித்தார்.
மஞ்சள் கோரையினப் புற்களை நாசினிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாததால், தமது நெல்வயல்களிலுள்ள மேற்படி புற்களை தற்போது மனித வலுவினைப் பயன்படுத்தி விவசாயிகள் அழித்து வருகின்றனர்.
ஆனாலும், மனித வலு மூலம் களை பிடுங்கும் நடவடிக்கைகளுக்காக தாம் அதிகமான பணத்தினை செலவிட வேண்டியுள்ளதாகவும், இதனால், இம்முறையும் தமது விவசாயத்தில் நஷ்டத்தினை எதிர்நோக்கும் நிலை ஏற்படலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் விவசாயிகள் மேலும் கூறுகின்றனர்.
கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக நெற்செய்கையில் விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
21 minute ago
47 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
3 hours ago
3 hours ago