Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்டமை தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்காமல் விட்டமையே, இந்த ஆறு தொடர்ந்தும் சட்டவிரோதமாக மூடப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் பிரதேச சபைக் காரியாலத்தில் நேற்று புதன்கிழமை சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் உப தவிசாளர் அன்சில் கலந்து கொண்டு அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்டு வருவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வரும் முறைப்பாடுகள் குறித்துப் பேசிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
உப தவிசாளர் அன்சில் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'அட்டாளைச்சேனை பிரதேச சபை கலைக்கப்பட்டு, அதன் விஷேட ஆணையாளராக பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் கடமையாற்றிய கால பகுதியில் கோணாவத்தை ஆற்றினை சிலர் சட்டவிரோதமாக மண்ணிட்டு நிரப்பி வந்தனர்.
இவ்வாறு ஆற்றினை மூடிய சட்டவிரோத செயலின் பின்னணியில் இப்பகுதியினை சேர்ந்த மாகாண சபை அமைச்சர் ஒருவரும் இருந்தார்.
இருந்த போதும், அப்போது கோணாவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்டமையை தடுப்பதற்கோ அல்லது அந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ பிரதேச செயலாளரும் அப்போதைய விஷேட ஆணையாளருமான எம்.எம். நஸீர் எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.
கோணவத்தை ஆறு சட்டவிரோதமாக மூடப்பட்ட அந்தச் செயலை அப்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் சட்டரீதியாகத் தடுத்து நிறுத்தி அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திருப்பாராயின் இன்று இந்த ஆற்றினை சட்டவிரோதமாக மூடுவதற்கு யாரும் முயற்சித்திருக்க மாட்டார்கள்.
எவ்வாறிருந்த போதும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை தேர்தல் மூலம் நாம் கைப்பற்றி கடந்த முறை நான் தவிசாளராக இருந்த காலகட்டத்தில், கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக மூடியவர்களுக்கு எதிராக நாம் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தோம்.
அந்த வழக்கில் - ஆற்றினை மூடியதாகக் குற்றம் சாட்டப்பட்டோர் ஒரு சமரசத்துக்கு வந்து, தாம் ஆற்றில் கொட்டிய மண்ணை அங்கிருந்து அகற்றுவதாகத் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்களை நீதிமன்றம் அந்த வழக்கிலிருந்து விடுவித்தது.
இவ்வாறானதொரு நிலையில், கோணாவத்தை ஆற்றில் சட்டவிரோதமாக மண் கொட்டப்பட்ட அந்த இடத்தில் ஒரு சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு இப்பிரதேசத்தின் அரசியல்வாதியொருவர் திட்டமிட்டார்.
இதில் ஆச்சரியமென்னவென்றால், அவ்வாறு ஒரு பூங்கா அமைப்பதற்கான நில அளவைப் படத்தை வரைவதற்கான செலவினை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நஸீர் - பிரதேச சபைக்கான விசேட ஆணையாளராகக் கடமையாற்றிய போது, இதே பிரதேச சபை நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்தார்.
அதாவது, இதனூடாக அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினைச் சட்டவிரோதமாக மூடிய இடத்தில் சிறுவர் பூங்காவொன்றை அமைப்பதற்குரிய சட்டபூர்வ அனுமதியினை பிரதேச செயலாளர் நஸீர் பெற்றுக் கொடுத்தார்' என்றார்.
36 minute ago
38 minute ago
42 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
42 minute ago
45 minute ago