2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சம்மாந்துறையில் நீர் பருகிய 75 மாணவர்கள் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2011 ஜூலை 05 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த சுமார் 75 மாணவர்கள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையிலுள்ள நீரைப் பருகியதை அடுத்தே மேற்படி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் சுமார் 150 மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பலர் பாடசாலையிலேயே முதலுதவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர்கள் மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள், அவர்களுக்கு சேலைன் வழங்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X