2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட அறுவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொத்துவில்  அறுகம்பை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர்  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இதன்போது, பணம் மற்றும் சீட்டு அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அறுகம்பை பழைய பாலத்திற்கு கீழ் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் உல்லை, சாவாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி வசந்த குமார தெரிவித்தார்

இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X