Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 23 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளுக்கான இன்றைய தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளின் போது வாக்காளர்களிடம் அடையாள அட்டைகள் இல்லாமை குறித்த பிரச்சினைகளை அவதானிக்க முடிந்ததாகவும் பெரியளவில் வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் பஃப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
காரைதீவு மற்றும் திருக்கோவில் பிரதேச வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அவரிடம் - தேர்தல் கள நிலைவரம் குறித்துக் கேட்டபோதே மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'காலை 9.40 மணியளவில் காரைதீவு பகுதியிலுள்ள நிலையங்களுக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்களில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு வேகமான இடம்பெற்றிருந்தது.
திருக்கோவில் பிரதேசத்தில் காலை 10.30 மணியளவில் பார்வையிட்டபோது, 18 வீதமான வாக்களிப்பே இடம்பெற்றிருந்தது. இது ஒரு மந்தமான வாக்களிப்பாகவே தெரிகிறது.
இன்றைய தினம் பெரியளவில் எம்மிடம் தேர்தல் மீறல் குறித்த முறைபாடுகள் செய்யப்படவில்லை. அதேவேளை, வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லாமை குறித்த பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago