Super User / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு முனாஸ் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவம் இன்று காலை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முனாஸ் நற்பணி மன்றத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்றத்தின் ஆலோசகரான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட சாரண ஆணையாளரும், விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒன்பது கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முனாஸ் நற்பணி மன்றம் - வறிய மக்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
சிறாஜ் Saturday, 20 August 2011 09:45 PM
இந்த செய்தியை முன் பேஜுக்கு போடுங்களேன் தயவு செய்து.....
Reply : 0 0
சிறாஜ் Saturday, 20 August 2011 10:06 PM
முனாஸ் நற்பணி மன்றத்தின் சேவையினைப் பாராட்டுகிறேன். தொடருங்கள் உங்கள் சேவை எல்லா இடமும் பரவட்டும் வாழ்த்துக்கள்
ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் நிற்கிற ஐடியாவா முனாஸ் நற்பனி மன்றத் தலைவருக்கு?
Reply : 0 0
senaiyuraan Monday, 22 August 2011 05:04 AM
எது நல்லதுவோ அது நன்றாகவே நடக்குது. எனவே முனாஸ் நற்பணி மன்றம் ஊருக்கு நல்லது செய்வதனை பாராட்டுகிறோம். மன்றதின் தளத்தில் கூட நல்ல வரவேற்க கூடிய விடயம் நிறையவே பார்த்தேன். பாராட்டுக்கள் இன்னும் இன்னும் நல்ல பல சேவைகள் செய்து நாட்டுக்கும் ஊருக்கும் நல்லவர்களாக வாழுங்கள் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
siraj Sunday, 28 August 2011 08:06 AM
எங்க ஊருக்கும் உங்க சேவையினை கொண்டு வாங்க முனாஸ் நற்பணி மன்ற தலைவரே. ஏன்னா அப்பதான் நீங்களும் அரசியலில் குதிக்கலாம். கலாநிதி பட்டம் தேவையில்லையா உங்களுக்கு? நல்லா சேவை செய்யுங்க மன்றத்தின் தலைவரே.......
Reply : 0 0
Ameer Masahir Sunday, 28 August 2011 09:47 AM
உண்மையாக இப்படி ஒரு அமைப்பு இருப்பதை நான் மிகவும் சந்தோஷமடைறேன்.நான் ஒரு பிரதேசவாதி என்ற வகையில் நன்றி தெரிவிக்குறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago