2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நீண்டகால தேவைகள் தொடர்பில் கல்முனை மாநகர சபையில் விசேட கூட்டம்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகரசபையின் நீண்டகாலத் தேவைகளாக கருதப்படும் விலங்கு அறுமனை, சிறுவர் பூங்கா மற்றும் வாகனத்தரிப்பிடம் போன்றவற்றை அமைப்பது தொடர்பான கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் கல்முனை மாநகர ஆணையாளருமான ஏ.ஜே.எம்.இர்சாத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளரும் பிரதேச செயலாளருமாகிய எம்.எம்.நௌபல், மாநகர சபையின் கணக்காளர் எஸ்.டீ.சாலித்தீன், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌசி, மாநகர பிரதம மிருக வைத்திய அதிகாரி டொக்டர் சுல்பிகார் உட்பட ஆசிய மன்ற திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.வலீத் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0

  • oor kuruvi Friday, 26 August 2011 05:10 AM

    காலம் கடந்த விடயமும் காலம் கடத்தும் விடயமும் இக்கூட்டமுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X