2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'அறுகம்பே' கையேட்டு வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, பொத்துவில் அறுகம்பை கடல் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சர்வதேச கடலலை நீர்ச்சறுக்கல்  விளையாட்டு போட்டிகள் மற்றும் உல்லாச புரியையும் அதனைச் சார்ந்த பிரதேசங்களையும் பற்றிய 'அறுகம்பே' என்னும் பெயரிலான
சிறிய கையேட்டு வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை  அறுகம்பை உல்லாச விடுதியில் நடைபெற்றது

உல்லாசத்துறை பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜௌவ்பர் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸாந்த விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸாந்த விக்கிரமசிங்க முதல் கையேட்டை அறுகம்பை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜௌபருக்கு வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X