2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கல்முனை மாநகர சபை ஆணையாளராக லியாக்கத் அலி பதவியேற்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த ஜே.லியாக்கத் அலி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

கல்முனை மாநகர சபையில் வெற்றிடமாக காணப்பட்ட ஆணையாளர் பதவிக்கு இன்றுமுதல் கடமை மேற்கொள்ளும் வண்ணம் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர், காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும், ஓட்டமாவடி பிரதேசத்தின் பிரதேச செயலாளராகவும், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார்.

இவர் இறுதியாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • தம்பி Thursday, 20 October 2011 07:37 PM

  கவனம், நிறையக் குழிகள் தோண்டப்படும். அவதானமாக இருந்து பணிகளைச் செய்யுங்கள் லியாகத்!

  வாழ்த்துக்கள்!!!

  Reply : 0       0

  saniyan Tuesday, 18 October 2011 01:50 AM

  அது சரி இவருடைய நிரந்தர தொழில் என்ன?

  Reply : 0       0

  Nafeel Tuesday, 18 October 2011 03:23 AM

  சனி பிடிச்சா இது எல்லாம் எங்க விளங்கப்போகுது? லக லக லக லக லக

  Reply : 0       0

  samsudeen Tuesday, 18 October 2011 06:31 AM

  அட சனியா, அவர் ஒரு பிரதேச செயலாளராக இருந்தவர்.

  Reply : 0       0

  yaseen Tuesday, 18 October 2011 07:46 AM

  மக்கள் சேவையும். அரசிடம் மாத்திரம் சம்பளம் பெறுதலும்.

  Reply : 0       0

  maazeen Tuesday, 18 October 2011 06:25 PM

  சனியண்ட கேள்வி பிழை

  Reply : 0       0

  uooran Tuesday, 18 October 2011 07:34 PM

  சிராஸ் அவர்களே!
  சாய்ந்தமருது மக்கள் உங்களை வரவேற்ற, சாய்ந்தமருது மாளிகைக்காடு சந்தியில் நிர்வாணமாக நமது கல்முனை மாநகரின் வரவேற்பு வளைவு காணப்படுகின்றது.
  இங்கு சாய்ந்தமருது கல்முனை என பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. நீங்கள் கல்முனை மேயர் என்ற அடிப்படையில் செயற்ப்பட்டு பிரதேச வாதத்துக்கு அப்பட்பட்டவர் என உங்களை நிருபிக்க உடனடியாக நமது மாநகரின் வரவேற்பு இலட்சனையை அதில் பொறியுங்கள். ஊழலுக்கு எதிரானவர் என காட்ட "சாய்ந்தமருது கடற்கரை பார்க்" நிர்மாண விடயம் தொடர்பாக மக்களுக்கு அறிக்கை சமர்ப்பியுங்கள்.

  Reply : 0       0

  Maruthoor. A.R.M Tuesday, 18 October 2011 09:30 PM

  லியாக்கத் சேர் சேவை ஆற்றல் உடைய மனிதர் , யாரோடும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் ..... வாழ்த்துக்கள் .....சேர் ..

  Reply : 0       0

  riswan Tuesday, 18 October 2011 11:27 PM

  நல்வாழ்த்துக்கள் சார்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .