A.P.Mathan / 2011 ஒக்டோபர் 25 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனிபா)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஓமான் நாட்டின் உதவியால் இன்று செவ்வாய்க்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயளாலர் ஏ.மன்சூர் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை, புத்தகப்பைகளுடன் அப்பியாசக் கொப்பிகளும் 50 விவசாய, தச்சு, மேசன் தொழிலாழிகளுக்கு உபகரணங்களும் மற்றும் 500 பேருக்கு உலர் உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம அதிதியாகவும் ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹுமைட் அல் மானி கெளரவ அதிதயாகவும் விஷேட அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசிம், பி.எச்.பியசேன, திருமதி சிரியானி விஜய விக்கிரம மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எ.எம்.நௌசாத் உட்பட முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)







.jpg)
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago