Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டிற்கான மீளாய்வு செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பு பட்டியல் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சிச் சபைகள், கிராம சேவையாளர்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.
தமது பெயர், விபரம் மற்றும் குறித்த விலாசத்தைச் சேர்ந்த அனைவரதும் பெயர் விபரங்கள் சரியான முறையில் வெளியிடப்பட்டிருப்பதனை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர் விபரங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருப்பின் அங்கு பெறக்கூடிய விண்ணப்படிவங்களைப் பெற்று மாற்றியமைக்கப்பட வேண்டிய விபரங்களை எழதி மாவட்ட தேர்தல்கள் அலுவகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென தேர்தல்கள் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago