Menaka Mookandi / 2011 நவம்பர் 09 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சமையல் வேலையில் ஈடபட்டிருந்த பெண், மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததால் பலத்த தீக்காயத்துக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் தீக்காயங்களுக்கு உள்ளான மேற்படி பெண், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ;ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி பெண்ணின் உடம்பில் 85 வீதமான பகுதி கடுமையான தீக்காயங்களுக்கு உட்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago