Kogilavani / 2011 நவம்பர் 09 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
புனித ஹஜ் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலம்குளம் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை ஆலம்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஆலங்குளம் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எச்.இஜாறுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ், ஆலம்குளம் பாடசாலை அதிபர் ஏ.சி.எம். முசம்மில் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
ஆலம்குளம் சிவில் பாதுகாப்பு அமைப்பினர் மேற்படி நிகழ்விற்கு அனுசரணை வழங்கினர்.
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
மக்களில் ஒருவன் Thursday, 10 November 2011 03:08 AM
வாழ்த்துக்கள் பத்திரிகையாளர் மற்றும் அதிதிகள் மாணவர்களுக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago