Kogilavani / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்புடன் சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் கூட்டமும், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கமிட்டி தெரிவும் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்ஸுர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக, காரைதீவு பிரதேச உதவிச் செயலாளர் ஜெகநாதன், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும், கெப்சோ நிறுவனத்தின் தலைவருமான ஐ.அப்துல் ஜப்பார், கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிராம மட்டத்தில் நிலவும் சமூக விரோத குற்றச் செயல்களை தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் சிவில் பாதுகாப்புக் குழுவின் உதவியோடு நல்லுறவினை எற்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 96 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர் மற்றும் செயலாளர்கள் தெரிவும் இடம்பெற்றது.

.jpg)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago