Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாடசாலை மாணவர்களுக்கு 2012ஆம் ஆண்டுக்கான சத்துணவு வழங்கும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்கும் பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.கிதுறு முகம்மது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பெறோசா நக்பர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அறபா வித்தியாலயத்தில் இம்முறை தரம் - 01 இல் இணைந்து கொண்ட மாணவர்களுக்கும், தரம் - 02 மாணவர்களுக்கும் அதிதிகள் போசாக்கு உணவுகளைப் பரிமாறினர்.
சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். அன்சார் ஒன்றிணைப்பில் இடம்பெற்ற மேற்படி சத்துணவு ஆரம்ப நிகழ்வில், ஆசிரிய ஆலோசகர்களான யூ.எல். நியாஸ் அகமட், என். சும்சுதீன், கலாபூஷண் ஆசுகவி அன்புடீன, ஆரம்பப் பிரிவு வலயத் தலைவர் ஐ.எல். சஹுபுத்தீன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாழு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான சத்துணவு வழங்கும் செயற்பாட்டின் முதல் நாள் நடவடிக்கை - இன்று வியாழக்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago