Kogilavani / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
'யங் லயன்ஸ்' விளையாட்டுக்கழகத்தினால் அட்டாளைச்சேனை 9ஆம் பிரிவு பிரதான வீதியருகில் உடற்பயிற்சிக் கூடமொன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் உடற்பயிற்சிக் கூடத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
'யங் லயன்ஸ்' விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்விளையாட்டு கூடத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சிலோன் சிப்பிங் லைன்ஸ் லிமிடட் முகாமையாளர் எம்.ஏ.நஸீர், வெளிநாட்டு நலன்புரி வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.நஜீட் அஹமட், பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம். ஹசீப், யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் ஆசுகவி அன்புடீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் உதுமாலெப்பை,
'யங் லயன்ஸ்' விளையாட்டுக் கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தின் மேம்படுத்தலுக்காக ஐந்து லட்சம் ரூபாவினை வழங்கவுள்ளதாக உறுதியளித்தார்.
.jpg)
.jpg)
29 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago