Suganthini Ratnam / 2012 மார்ச் 21 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று வீதியில் எட்டாவது மைல்கல் பிரதேசத்தில் யானை தாக்கியதன் காரணமாக விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதாக தமனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வானகம பிரதேசத்தைச் சேர்ந்த எம்.தாவூத் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணியளவில் இவ்விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரில் வந்த யானை அவரைத் தாக்கியதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமன பொலிஸார் குறிப்பிட்டனர்.
28 minute ago
3 hours ago
3 hours ago
KS Wednesday, 21 March 2012 10:28 PM
பொறுப்பு கூற யாருமே இல்லை ! ஏழை விவசாயியின் உயிர் உடன் சர்வ சாதாரணமாக பறி கொடுக்கப்படுகின்றது. வன இலாகா இருந்து என்ன பயன்? மாலை 4 மணிக்கு வாங்காமத்தின் நடு ஊருக்குள் ஏழை விவசாயி பதற கதற யானை பலி எடுத்தமை மனதை கனக்கவைத்து விட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago