2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை இன்று காலமானார்

Kogilavani   / 2012 மே 22 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். 

கடந்த இரு தினங்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.ஜெமீல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தற்பொழுது கொழும்பில் உள்ள இவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு விசேட விமானத்தின் மூலம் கொண்டு செல்லவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக எம்.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார்.
 
மூன்று பிள்ளைகளின் தந்தையான மசூர் சின்னலெப்பை, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராகப் பதவி வகுப்பதற்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் சின்னலெப்பை கடமையாற்றினார்.

1994 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் அரசியலில் களமிறங்கிய இவர், அந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவராக  தெரிவாகியிருந்தார்.

இவ்வாறு அரசியல் ரீதியாக பல்வேறு பதவிகளை வகித்த இவர் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண தலைவராகவும் சில காலம் கடமையாற்றினார்.

அரசியலுக்கு அப்பால், ஒரு தொழிலதிபராக திகழ்ந்த இவர் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
        

You May Also Like

  Comments - 0

  • Razeek Tuesday, 22 May 2012 11:09 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    Brot Monday, 28 May 2012 07:33 AM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன் --

    Reply : 0       0

    AaZil - BaZa - NTR Thursday, 24 May 2012 09:37 AM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன் --

    Reply : 0       0

    i,L,NASAR ADD CEB Wednesday, 23 May 2012 10:15 PM

    இன்னாலில்லாஹி வஹின்னாஇலஹிராஜஊன்

    Reply : 0       0

    irfan modh ansar Wednesday, 23 May 2012 01:31 AM

    இன்னாலில்லாஹி

    Reply : 0       0

    kiyas Tuesday, 22 May 2012 04:07 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்.

    Reply : 0       0

    IBNUABOO Tuesday, 22 May 2012 03:02 PM

    எல்லோருடனும் அன்பாய் பழகும் இனியவர். அக்காலத்தில் மிக சிறந்த ஓட்டபந்தய வீரர். பார்க்க அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும் அவர் உருவம் என்மனதில் தோன்றுகிறது. ஜப்பானில் வசிக்கும் எனக்கு இத்துயர செய்தி தமிழ் மிரர் மூலமே கிட்டியது. அன்னாருக்காக பிரார்திப்போம்.

    Reply : 0       0

    Niyas Tuesday, 22 May 2012 02:42 PM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன்

    Reply : 0       0

    mam.fowz Tuesday, 22 May 2012 02:26 PM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    Reply : 0       0

    i,L,NASAR CEB Tuesday, 22 May 2012 11:51 AM

    இன்னாலில்லாஹி

    Reply : 0       0

    mohamed thahabi Tuesday, 22 May 2012 11:42 AM

    மசூர் சின்னலெப்பை அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    imran Tuesday, 22 May 2012 05:42 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இறைவன் அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஷ் எனும் சுவர்க்கதை வழங்குவானாக.

    Reply : 0       0

    sameer Tuesday, 22 May 2012 10:52 AM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன்

    Reply : 0       0

    nusky Tuesday, 22 May 2012 09:11 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    Reply : 0       0

    mohamed sihan Tuesday, 22 May 2012 07:33 AM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன்

    Reply : 0       0

    A.S.A.Risny Tuesday, 22 May 2012 07:31 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    Mohamed Murshid Tuesday, 22 May 2012 07:23 AM

    இன்னாலில்லாஹி வயின்னாஇல்யிஹி .........
    அல்லாஹ் இவரைப் பொருந்த எமது பிராத்தனை.........

    Reply : 0       0

    Abdulcareem Tuesday, 22 May 2012 07:08 AM

    ` இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    pottuvilan Tuesday, 22 May 2012 07:02 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    S.Sinasudeen Ax Tuesday, 22 May 2012 06:51 AM

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சஹீதான கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை அவருக்கு யாஅல்லாஹ் ஜன்னதுல் ஃபிர்தொவுஸ் எனும் சுவர்க்கம் அடைவதற்கு நாமும் இறைவனிடம் பிரார்திக்கின்றோம்... ஆமீன்..

    Reply : 0       0

    S.Sinasudeen Tuesday, 22 May 2012 06:39 AM

    இன்னலில்லாஹி வஇன்ன இலாஹி ராஜிஊன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .