2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச விளையாட்டுக்கழகங்களின் சம்மேளன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஸீபிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும்,  கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட், ரீ.ரீ.லங்கா முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜஹான், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.கடாபி, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுச் செயலாளர் எம்.எம்.எம்.றபீக், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஐ.எம்.கலீல் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச விளையாட்டுக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதோடு கிழக்கு மாகாண சபை தேர்தல் நிறைவு பெற்றதும் சாய்ந்தமருது வொலிவேரியன் குடியேற்ற பிரதேசத்தில் மர்{ஹம் எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X