2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிரதேச மீளமைப்பு தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

கல்முனை, பிரதேச மீளமைப்பு தொடர்பான கூட்டம் நேற்று மாலை கல்முனை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் நல்லிணக்க ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க (நா.உ.) கலந்துகொண்ட  இக்கூட்டத்தில் கிராம மட்ட அபிவிருத்திகள், சமூக மேம்பாடு, மகளீர் சிறுவர் மேம்பாடு தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள், தேவைப்பாடுகள் தொடர்பாகவும்; கருத்துக்கள் பெறப்பட்டு அவற்றை தீர்த்துக்கொள்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ், சட்டத்தரணி எப்.எம்.ஏ.அமீருல் அன்சார் மௌலானா உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசத்தின் சமூகமட்ட கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X