2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமைச்சர் அதாவுல்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தேர்தல் திணைக்களத்தின் விசேட குழு

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (நபீலா ஹுஸைன்)

அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுக்கப்படுதல் என்பன அக்கரைப்பற்றில் அதிகம் இடம்பெறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான பவ்ரல் மற்றும் கபே ஆகியன முறைப்பாடு செய்துள்ளன.

இப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பொதுநிர்வாக அமைச்சு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பவ்ரல் அமைப்பின்  நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.

இந்த அமைச்சர் தனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களை பகிரங்கமாக பயமுறுத்தியுள்ளார் என ஹெட்டியாராச்சி கூறினார்.

அக்கரைப்பற்றிலுள்ள சுற்றுலா விடுதியில் இந்த அமைச்சர் 20 இற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தங்கியிருப்பதாக 'கபே' அமைப்பு கூறியுள்ளது.

இச்சுற்றுலா விடுதியை தேர்தல் திணைக்களம் முறைப்பாட்டு நிலையமாக பயன்படுத்தவுள்ளதால்  அதைவிட்டு வெளியேறும்படி எழுத்துமூலம் கேட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

"தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரையும் ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் நியமித்துள்ளோம்" என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


  Comments - 0

  • Riyas Wednesday, 29 August 2012 02:09 AM

    வருகின்ற விசாரணையாளா்களின் கண்களிலும் மண்தூவாவமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விடயமாகும்.

    Reply : 0       0

    Mohamed Wednesday, 29 August 2012 05:08 AM

    நல்ல வேலை.

    Reply : 0       0

    Bash Wednesday, 29 August 2012 09:02 AM

    எங்கிட அமைச்ச‌ருக்கு இதெல்லாம் வெறும் ஜுஜுபி

    Reply : 0       0

    Aswer Wednesday, 29 August 2012 03:00 PM

    வாழ்க ஜனநாயகம்

    Reply : 0       0

    #rara Wednesday, 29 August 2012 07:12 PM

    எங்கிட அமைச்சருக்கு இதெல்லாம் வெறும் (ஜு ஜு பி)
    என்றால்,.........?
    நடப்பதெல்லாம் உன்மைதானே!

    Reply : 0       0

    mursith Thursday, 30 August 2012 09:40 AM

    வருகின்ற விசாரணையாளா்களின் கண்களிலும் மண்தூவாவமல் பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விடயமாகும்

    Reply : 0       0

    chenailion Wednesday, 12 September 2012 02:25 AM

    அதாவுல்லாவுக்கு இதெல்லாம் (ஜு ஜு பி)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X