2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் எம்.ஐ.அன்வர் இஸ்மாயீல் ஆராதனை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்தியஸ்தர்சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் உட்பட 22 உறுப்பினர்களுக்கு நீதிபதி திருமதி ஏ.கனகரத்தினம் நியமனங்களை வழங்கிவைத்தார்.

மத்தியஸ்தர்சபையின் தவிசாளர் மௌலவி எம்.ஐ.ஹஜ்ஜி முஹம்மத் தலைமையில் நடைபெற்;ற இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி ஏ.கனகரத்தினம் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேசசபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷக்ட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X