2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சமூக உணர்வுகள் பற்றி பேசுபவர்கள் அன்று பிரபாகரனிடம் மண்டியிட்டு கிடந்தனர்: ஜனாதிபதி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

'இன்று இனவாதமும், மதவாதமும் சமுக உணர்வுகளும் பற்றி பேசிவருகின்ற சக்திகள் அன்று பிரபாகரனிடம் சென்று அவரின் காலடியில் மண்டியிட்டுக் கிடந்தனர். அந்த நேரத்தில் நெஞ்சுறுதியுடன் இந்த பிராந்திய மக்களுக்காகவும் அவர்களின் நிம்மதிக்காகவும் குரல் கொடுத்த முஸ்லிம் தலைவர் அதாவுல்வா என்பதை நான் இவ்விடத்தில் உறுதியோடு கூறிக் கொள்கின்றேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார்.

'இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் கைகோர்த்து ஒன்றாக வாழவேண்டும் என்பதற்காகவே நான் சதாவும் உழைத்து வருகின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொது மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களை ஆதரித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'நான் பிரதமராக இருக்கின்ற போது 2005ஆம் ஆண்டு இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைத்த அமைச்சர் அதாவுல்லா எங்களால் இந்தப் பிராந்தியத்தில் நிம்மதியாக வாழமுடியாதுள்ளது. எங்களுடைய மக்கள் பள்ளிகளுக்க செல்லமுடியாது, வயல்களுக்க செல்லமுடியாது, கடலுக்கு செல்லமுடியாது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளது, எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள் இந்தப் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்யுமாறு என்னிடம் கோரினார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 30 வருட பயங்கர வாதத்தை இல்லாமல் செய்து உங்களை நிம்மதியாக வாழ வைத்துள்ளோம். அதன்பின்னர் எமது இந்த நாட்டை சகல துறைகளிலும் அதாவது கல்;வி, சுகாதாரம், பாதை, மின்சாரம், நீர்பாசனம், குடிநீர் பிரச்சினைகள் ஏன் விவசாய மக்களுடைய பிரச்சினைகள் என்பவற்றை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

இதனை சகித்துக் கொள்ளாத சக்திகள் கட்சிகளும் விடுதலைப் புலிகளும் ஜெனிவாவிற்கு சென்று எனக்கு எதிரான தீர்மானத்தை எடுத்தபோது உலகத்திலே வாழுகின்ற இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் எனக்கு ஆதரவு வழங்கியது. இது உங்கள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.

நாம் இன்று எமது எதிர்கால சந்ததிகளுக்காக அவர்களின் கல்வியை வளம்பெறச் செய்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய இழைய தலைமைகளை உருவாக்கி வருகின்றோம்.

எம்மையும் உங்களையும் பிரித்துவிடுவதற்காக சில விசமத்தனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதை நீங்கள் நம்பிவிடக் கூடாது. நான் உங்கள் நண்பன். உங்கள் சொந்தக்காரன். நீங்கள் எந்தப் பயமும் கொள்ளத்தேவையில்லை முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் எனது சகோதரர்கள்.

இன்று இனவாதம் பேசித்திரிபவர்கள் இங்கு வந்து, அங்கே சிங்களவர்கள் பள்ளிகளை உடைக்கின்றனர் என்கிறார்கள் தென்னிலங்கைக்கு சென்று அங்கே முஸ்லீம்கள் கோயில்களை உடைப்பதாக கூறிவருகின்றனர்.

இன, மத, பிரதேச பேதம் எதுவும் இருக்க முடியாது.  எம்முடைய சகோதர பாசம் என்றும் உங்கள் மீது உண்டு. இதுதான் உண்மை யதார்த்தம். இந்ந நாட்டிலுள்ள பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தையும் ஒரே முறையில் பாதுகாக்கின்ற பொறுப்பு என்னிடமுள்ளது. அதை நான் பாதுகாப்பேன். சகலருக்கும் சாந்தியும் சமாதானமும் சுகவாழ்வும் கிடைக்கவேண்டும். இதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

இந்த நாட்டில் சிறுபான்மை என்பது கிடையாது. நாம் எல்லோரும்  பெரும்பான்மையே. இன்று கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பல கோடிக்கணக்கான பணங்கள் செலவு செய்யப்பட்டு அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பலகோடிக்கணக்கான பணங்கள் வழங்கப்படும். அவற்றை செய்வதற்கு நல்ல நேர்மையானவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் அதாவுல்லா எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அதை புத்தியுடன் செய்வார். அதில் வெற்றியும் கொள்வார். நீங்கள் அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து உங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும்' என மேலும் கூறினார்.

  Comments - 0

  • rima Friday, 07 September 2012 06:03 PM

    நம்பிவிட்டோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X