2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுகாதாரம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மூவினங்களையும் சேர்ந்த 600 சிறுவர்களுக்கு சுகாதாரம் தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை திருக்கோவில்  தாண்டியடி சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் வெளியரங்கில்  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வேள்ட்விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் சிறுவர்களின் மந்த போஷாக்கு, சிறுவர் பிராய நோய்கள்,
நீர் சுகாதாரம், தனிநபர் சுகாதாரம், சிறுவர் போஷாக்கு போன்ற விடயங்கள் சிறுவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இப்பயிற்சிப்பட்டறையில் திருக்கோவில் பிரதேச சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுலோச்சனா ராஜேந்திரா, கஞ்சிக்குடிச்சாறு இராணுவ முகாம்
பொறுப்பதிகாரி சி.பி.பியசிறி, வேள்ட்விஷன் நிறுவனத்தின் சுகாதார திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி ஜெயானந்தன், போஷாக்கு திட்ட இணைப்பாளர் வி.மிரலாளன், போஷாக்கு சுகாதார உத்தியோகத்தர் சுதர்ஷன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X