2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யுனிசெபின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசலை கட்டிடங்கள் திறப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

பின்தங்கிய பாடசாலைகளின் வளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளான  தம்பிலுவில் அரச தமிழ் கலன் பாடசாலை மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், யுனிசெப் நிறுவன கல்வி திட்ட அதிகாரி ஏ.ரிபால், கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் அதிபர் பி.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு திருத்தவேலைகள் செய்யப்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய கட்டிடத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர்.

இப்பாடசாலைகளின் திருத்த வேலைகள் யுனிசெப் நிறுவனத்தின் 10 இலட்சம் ரூபா நிதியுதவியுடனும் பெற்றோர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X