2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாநகர சபைகளின் வருமானங்களை அதிகரிப்பது தொடர்பில் செயலமர்வு

Super User   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசிய பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனை மற்றும்அக்கரைப்பற்று மாநகர சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோருக்கான மூன்று நாள் செயலமர்வு கடந்த வாரம் கண்டி சுவிஸ் ரெஸிடன்ஸில் நடைபெற்றது.

இதன்போது, மாநகர சபைகளின் வருமானங்களை அதிகரிப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு பயிற்சி பட்டறை முறை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டதோடு உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு வழங்கும் சேவைகளை இலகுவாக கையாழும் பொருட்டு இலகுபடுத்துனர்களாக செயற்படுவதற்கான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்த வதிவிட செயலமர்வில்  கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா, ஆசியா மன்றத்தின் சிரேஷ்ட தொழிநுட்ப ஆலோசகர் சிசிர குமாரசிறி, ஆசியா பவுண்டேசனின் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் றிசாத் ஷெரீப் மற்றும் ஆசியா பவுண்டேசனின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம் வலீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயற்திட்டம் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஆசியா பவுண்டேசனினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.










  Comments - 0

  • A.L.M.Afkar Monday, 08 October 2012 08:28 PM

    செய்திகளில் திரிபு எதற்கு?

    Reply : 0       0

    Z.M.Natheer Monday, 08 October 2012 08:53 PM

    யாருக்கு வக்காலத்து வாங்குறீர்?

    Reply : 0       0

    M.Nisardeen Monday, 08 October 2012 08:57 PM

    கல்முனை மகனின் கை வரிசை...

    Reply : 0       0

    rima Tuesday, 09 October 2012 04:26 PM

    இவங்கள நம்பி ஓட்டு போட்டதற்கு எமக்கு இது வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X