2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டடுள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

உதவி திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம வளவாளராக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் கலந்து கொண்டார். மற்றும் அம்பாறை மாவட்ட பிரதி மாவட்டப் பணிப்பாளர் ஆனந்தராஜா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான ஏ.எல்.அஸ்லம், எச்.எம்.ஹமீட், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இச்செயலமர்வில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தொழில் நடைமுறைகள் தொடர்பான விளக்கங்கள்; மற்றும் செயற்பாட்டு திறன் தொடர்பான விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X