2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சீனா பயணம்

Super User   / 2012 நவம்பர் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

சீனாவில் நடைபெறும் மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகளின் தரம் நிர்ணயம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி சீனா பயணமாகவுள்ளார்.

சீனாவின் சென் சென்ங் நகரிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காலி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் டாக்டர் ஜாபிர் ஆகியோரே சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையிலிருந்து செல்லவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு சுமார் ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X