2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்- த.தே.கூ உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 30 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான மாகாணசபை உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கென 2013 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தும்போது மாகாணசபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தமது தேவைகள், முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகளுக்கு 174 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது, அமைச்சின் செயலாளர் கே. பத்மநாதன், விவசாய அமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் இ. யுகநாதன், மீன்பிடி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ரி. சுதாகரன் கால்நடை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.          


                                                                                                                                                                                  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X