2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாகாண விவசாய அமைச்சின் நிதியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கென 2013 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினைப் பயன்படுத்தும் போது மாகாணசபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின்; 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், விவசாய துறைக்காக 60 மில்லியனும் ரூபாவும், மீன்பிடித்துறைக்கு 15 மில்லியனும் ரூபாவும், கால்நடை மற்றும் சுற்றுலா துறைகளுக்கு தலா 45 மில்லியனும் ரூபாவும், கிராமிய கைத்தொழில் துறைக்கு 9 மில்லியனும் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிதியினை பயன்படுத்தும் போது, மாகாணசபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையும் இதில் கலந்து கொண்டார்.

மேற்படி கலந்துரையாடலில், மாகாணசபை உறுப்பினர்கள் தமது கோரிக்கைகள் மற்றும் யோசனைகளையும் முன்வைத்தனர்.

இதன்போது, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.அன்வர், ரி.எம்.ஜயசேன, ஏ.எல்.எம்.நசீர் அமைச்சரின் செயலாளர் கே.பத்மநாதன் மற்றும் அமைச்சின் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • Kalkuda Nalanvirumpi Sunday, 02 December 2012 04:11 AM

    நல்ல விடயம் மாகாண சபை உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தத்தான் வேண்டும். மற்ற பிரதேசங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும். Leader இன் சொற்படி அதிக வாக்குகளை கட்சிக்காக அளித்து விட்டு சொந்த ஊர்க்காரர்களை தோற்க வைத்து
    அபிவிருத்தி நடக்கும் Leader வருவார் என காத்திருப்பவர்களுக்கு ஒன்றும் இல்லை. உங்களது கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக அபிவிருத்தி செய்யுங்கள். ஆனால் எல்லா பிரதேசங்களுக்கும் சமமாக நிதி ஒதுக்குங்கள். தமிழ் ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் Ampara, Trincomalee Districtகளில் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். இதற்குப் பின் தேர்தல் ஓன்று இல்லை என்றா நினைத்துக் கொண்டீர்கள்? முடிந்தால் அடுத்து வரும் தேர்தலில் கல்குடாவிற்குள் Leader நுழைந்து வெளியூருக்கு வாக்கு கேட்டுப் பார்க்கட்டும். அமைச்சர் அவர்களே உதுமான் அமைச்சரின் ஆலோசனை கேட்டு அவரது கட்சி வளர துணை போகாதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X