2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கல்

Super User   / 2012 டிசெம்பர் 02 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் - தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பூர்த்தி செய்வதற்காக 01 லட்சம் ரூபா வீதம் 14 குடும்பத் தலைவிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.

சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ்.தியாகராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த நிதியினை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது, வாழ்வாதார திட்டத்தின் கீழ் 10 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபா வீதமும், நுகர்வுக் கடன் அடிப்படையில் 10 பேருக்கு தலா 05 ஆயிரம் வீதமும் நிதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளார் க. லவநாதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளார் எஸ். உதயன், சமுர்த்தி முகாமையாளார்களான ஈ. யோகராஜா, பீ. சிவநேசன், கே. இதயராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளார் எஸ். நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

                                                                                                                                                                     

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X