2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பசுமை விருது

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.றம்ஸான்)


திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையில் சிறப்பான சேவையினை ஆற்றியமைக்காக தேசிய பசுமை விருதினை (நஷனல் கிறீன் அவாட்) அட்டாளைச்சேனை பிரதேச சபை பெற்றுக்கொண்டது.

மத்திய சூழல் அதிகார சபையின் ஏற்பாட்டில் தேசிய பசுமை விருது (நஷனல் கிறீன் அவாட்) வழங்கும் விழா நேற்று திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த பண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். இவ்விருது வழங்கும் விழாவில், அம்பாறை மாவட்டத்துக்கு  3 விருதுகள் வழங்கப்பட்டன.

அந்தவகையில், திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையில் சிறப்பான சேவையினை ஆற்றியமைக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபையும் சிறந்த முறையிலான செயற்பாட்டினை வெளிப்படுத்தியமைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலையும் சிறந்த கல்விக் கூடம் என்ற வகையில் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயமும் மேற் குறித்த விருதுகளைப் பெற்றுக் கொண்டன.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி உதவி அணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் மத்திய சூழல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் மற்றும் உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.    


                                                                                                                                                                                                                                                                    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X