2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இடம்பெற்றன.

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீரின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் காரைதீவு கோட்ட கல்வி பணிப்பாளர் பரதன் கந்தசாமி, முறைசாரா கல்விக்கான இணைப்பாளர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும்   இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வானது  பெற்றோர்களுக்கும் இடைவிலகிய மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X