2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மைதான திறப்பு விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவும், 'செழிப்பின் களிப்பு' விழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இம் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், கட்டடத் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X