2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது காலவதியான மற்றும் சுட்டிகள் (லேபிள்கள்) இடப்படாமல் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றினை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஒன்றிணைந்து இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டன.

கல்முனைப் பிராந்தியத்துக்கான மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பரிசோதனை நடவடிக்கையில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களைச் சேர்த்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.          


                                                                                                                                                                                                                                                                   

  Comments - 0

  • mosi Saturday, 08 December 2012 08:18 AM

    இது போன்ற எவ்வளவோ பயனுள்ள செயற்பாடுள் உள்ளன தொடர்ந்து செய்வோமானால் நன்மையே..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X