2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக முழக்கம் மஜீத் நியமனம்

Super User   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக முழக்கம் மஜீத் என்று அழைக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஹமட்லெப்பை மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்; கிழக்கு மாகாண அமைச்சரின்  பொது மக்கள் தொடர்பு உத்தியோகத்தராக முழக்கம் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராகவும் உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகிக்கும் முழக்கம் மஜீத்,  இணைந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.

  Comments - 0

  • Jawahir Saly Tuesday, 11 December 2012 04:23 AM

    வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்

    Reply : 0       0

    vaasahan Tuesday, 11 December 2012 05:47 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ameen Wednesday, 12 December 2012 03:03 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    singappulli Wednesday, 12 December 2012 03:33 AM

    ஜெமீலின் ஆப்பு படுதொல்வி.வாழ்ஹ முலக்கம்...............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X