2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மனித உரிமை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,
எஸ்.எம்.எம்.றம்ஸான்)
 
மனித உரிமை தொடர்பில்  விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.சறூக் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இப்றாலெப்பை, செயலாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மற்றுமொரு கருத்தரங்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில்  நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயமும் அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் வலைப்பின்னல் அமைப்பும் இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

கல்வி, சுகாதாரம், சிவில் அரசியல் உரிமை சமவாயத்தில் கைது, தடுத்துவைத்தல், சித்திரவதை, தொழிலாளா் உரிமை, சிறுவா் உரிமை, முதியோர், விசேட தேவையுடையோர் உரிமை, கருத்துச் சுதந்திரமும் மொழி உரிமையும் ஆகிய  தலைப்புக்களில் இக்கருத்தரங்கு   இடம்பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X