2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'மூளை' தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பெரும் சர்ச்சை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, 'நீங்கள் மூளையில்லாமல் இருப்பது குறித்து நான் கவலையடைகிறேன்' என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே மாணசபை அமர்வின்போது தெரிவித்ததையடுத்து அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கால்நடை உற்பத்தி, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் குழுநிலை விவாதம்இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தயா கமகே இவ்வாறு கூறினார்.

இதனையடுத்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தயா கமகேயுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, 'மூளை இல்லை' என்று கூறியதை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு மூளை இருக்கிறது என்று தயாகமகே கூறினார்.

  Comments - 0

  • ibnuaboo Thursday, 13 December 2012 12:59 PM

    உண்மையை சொல்லிவிட்டு பின் ஏன் பொய் கூறினார்

    Reply : 0       0

    nari Thursday, 13 December 2012 05:51 PM

    உண்மையை சொல்லிவிட்டார்

    Reply : 0       0

    kiyas Friday, 14 December 2012 09:20 AM

    சரியாக சொல்லி இருக்கிரார்.

    Reply : 0       0

    farees Friday, 14 December 2012 06:49 PM

    சொன்னது சரி தானே

    Reply : 0       0

    define Wednesday, 19 December 2012 03:36 AM

    என்ன நடந்தாலும் உன்மையினை மறைக்கக் கூடாது..............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X