2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனைக்குடி சமுர்த்தி வங்கிச் சங்கம் மற்றும் வலயக் கட்டிடம் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனைக்குடி சமுர்த்தி வங்கிச் சங்கம் மற்றும் வலயக் கட்டிடம் அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு  கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சமுர்த்தி அதிகாரசபையின் ஊடாக ஒதுக்கப்படவுள்ள 25 இலட்சம் ரூபா நிதியைக் கொண்டு கட்டிட நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் ஏ.சி.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், அதிதிகளாக கிரின்பீல்ட் வீட்டு ஆதன முகாமைத்துவ சபைத்தலைவர் கபூல் ஆசாத், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • meenavan Friday, 14 December 2012 08:54 AM

    ஊரார் கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் என்பது எம்.பி ஹரிசுக்கு பொருத்தம். சமுர்த்தி அதிகார சபை நிதி ஒதுக்கீட்டில் அமைய பெறும் கட்டிட அடிக்கல் நாட்டு வைபவத்தில் தனது பெயரை பொறித்து விட்டார்,"தெயட்ட கிருல" 140 மில்லியன் 38 மில்லியனாக குறைந்து கல்முனைக்குடி பள்ளி வாசலுக்கு 14 மில்லியனும் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 2 மில்லியனும் ஒதுக்கீடு என்றும் ஒரு கிசு கிசு உண்மையாக இருக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X