2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச செயலகங்களில் பட்டதாரி பயிலுநர்களாகக் கடமையாற்றுகின்றவர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 84 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேனவின் அழைப்பின் பேரில், உணவு - போசாக்கு துறை சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ண, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 32 பயிலுநர்களும், காரைதீவு பிரதேச செயலகத்திலிருந்து 25 பயிலுநர்களும், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் 27 பயிலுநர்களும் இதன்போது தமக்கான நியமனக் கடிதத்தினை அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் நாவிதன்வெளி மற்றும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர்கள் எஸ்.கரன் மற்றும் கே.லவநாதன், மாநகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • meenavan Sunday, 16 December 2012 09:56 AM

    கல்முனை பிரதேச பட்டதாரிகள் நியமன நிகழ்வில் கல்முனை தொகுதி எம்.பி யின் பிரசன்னம் இல்லையா அல்லது அவருக்கு அழைப்பு வழங்கப்படவில்லையா? சாய்ந்தமருது பிரதேச பட்டதாரிகள் நியமன நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்ற மு.கா.எம்.பி.க்கு அவரது பிரதேச செயலக நிகழ்வில் பங்குபற்றாமை விந்தை தான்.....? கிடைக்கவுள்ள அரை மந்திரி பதவியும் வட்டாரத்துக்கு உரியதாக மட்டுபடுதப்படுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X