2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நில அதிர்வுக்கு மனித நடவடிக்கைகளே காரணம்?

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு மனித நடவடிக்கைகளே காரணமாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக புவிச்சரிதவியல் சுரங்க மற்றும் ஆய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் அம்பாறையின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதிகளில் நிறுவப்பட்ட புவி அதிர்வு கண்காணிப்பு பொறிகளின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மனித நடவடிக்களே இந்த நில அதிர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று நாம் சந்தேகிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின்போது ஆழ் துளையிடுதல் நடைபெறுகின்றது. இதனாலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் எமது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளதால் நாங்கள் இறுதி முடிக்கு இன்னும் வரவில்லை' என புவிச்சரிதவியல் சுரங்க மற்றும் ஆய்வுப் பணியகத்தின் தலைவர், கலாநிதி என்.பி.விஜயனாந்த  டெய்லிமிரருக்கு கூறினார். (எல்.பி.)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X