2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளரின் வாகனம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளரின் வாகனம் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மத்தியமுகாம் 11ஆம் கொலனியிலுள்ள தனது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட பிக்கப் ரக வாகனமே நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்டபோது அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்ததாக நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர்  சி.குணரெத்தினம் தெரிவித்தார்

இவ்வாகனம்  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X