2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் வெள்ளம் வடிந்தோடுவதில் தடை

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் வெள்ளம் வடிந்தோடுவதில் தடையேற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அம்பாபாறை மாவட்டத்தில் கடந்த இரவு முதல்இடைவிடாமல் பெய்துவந்த கனத்த மழையால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று முன்தினம் வரை வெள்ளப் பாதிப்புக்குள்ளாகாத பல இடங்களும்; மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் வெள்ளம் வடிந்தோடுவதில் தடையேற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் முறையாக நிர்மாணிக்கப்படாமல் கொத்தும் குறையுமாக ஆங்காங்கே தொடர்ச்சியறுந்த நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணம் எனவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X