2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாலமுனையில் சிவப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை இரண்டாம் பிரிவு குடியிருப்பு வளவிலுள்ள கிணற்றுநீர்  சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை  கிணற்றிலிருந்து நீர் அள்ளியபோது, நீரின் நிறம் சிவப்பாக மாறியிருந்ததாக வீட்டு உரிமையாளர் எஸ்.எல்.அவ்வா உம்மா தெரிவித்தார். 

சுமார் 07 வருடங்களுக்கு முன்னர் இக்கிணறு வெட்டப்பட்டது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு நீரின் நிறம் மாறவில்லையெனவும் அவர் கூறினார்.
இக்கிணறு கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் பகுதிக்குள் அமைந்துள்ளது.

இதேவேளை, இக்கிணற்று நீரைப் பார்வையிடுவதற்காக தினமும் வருகைதரும் மக்கள், போத்தல்களில் இந்நீரைக் கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகிறது.        

                                                                                                                                                                                                                        

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X