2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சட்டவிரோத பல்வகை தாவர விற்பனை நிலையம் நீக்கம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல்வகை தாவர விற்பனை நிலையமொன்றை கல்முனை மாநகரசபை நேற்று வியாழக்கிழமை அகற்றியுள்ளது. 
 
இவ்விற்பனை நிலையம்  தொடர்பில் பொதுமக்கள்  மாநகரசபை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து,  மாநகரசபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட குழுவினர் நேரில்ச் சென்று இவ்விற்பனை நிலையத்தை பார்வையிட்டு அதனை அகற்றியுள்ளனர்.

வடிகானின் மேல் அமைக்கப்பட்டிருந்த  இவ்விற்பனை நிலையம் காரணமாக  நீர்  வடிந்தோடுதல்  மற்றும்  வடிகானை துப்பரவு செய்தல்  போன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X