2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பேண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள இரண்டு பாடாலைகளுக்கு பேண்ட் வாத்தியக் கருவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆலையடிவேம்பில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் செயலாளர் ரி.ஜெயாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திலுள்ள அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மகாவித்தியாலயம் மற்றும் பனங்காடு விநாயகர் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளுக்கு மேற்படி பேண்ட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் 2012 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த பேண்ட் வாத்தியக் கருவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் சேவையினைப் பாராட்டி நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X